கைபேசி


உலகம் உன் கையிலே!
கவலை ஏன் உன் நெஞ்சிலே!
தெரியாத விஷயம் கண்டதாலே!
நீ நிலையில்லாமல் ஆடுகிறாயோ தன்னாலே!
தன்னிலை மறந்ததோ உன்னாலே!
கையில் தழுவுதோ குழந்தை போலே!
கண்ணீர் தழும்புதோ கணம் கடக்கையிலே!
உறவுகள் மறந்ததோ உன்னாலே!
கவலையின்றி நடிக்கிறேன் உன்னாலே!
தனிமையை ரசிக்கிறேன் உன்னாலே!
தனிமையில் சிரிக்கிறேன் தன்னாலே!
பைத்தியம் என்ற பேரும் உன்னாலே!
உலகத்தை ஆளுவதும் நீயே!
மனிதனை ஆளுவதும் நீயே!
உலகத்தை தன்னுள் அடக்கியதும் நீயே!
தனக்குள் மனிதனை அடக்கியதும் நீயே!
நன்மை தீமை அறிய நீ இருந்தாய்!
தீமை மட்டும் அறியும் ஆவலாய் மனிதர்கள்!
அதனால் தான் என்னவோ
உன்னை தீண்ட தகாத பொருளாய் கண்டார்கள்
பிள்ளை பெற்றவர்கள்!
காதலியாக நீ இருக்கிறாய்
நண்பனாக நீ இருக்கிறாய்!
தீமையிலும் நீ நன்மையிலும் நீ!
உனக்கு வாய் மட்டும் இருந்தால் என்ன நடக்கும்!
உன்னை வைத்திருப்பவர்களின் காது என்னவாகும்!
தெரியாத கெட்ட வார்த்தைகள் கூட கேட்கக் கூடும்!
பாவம் நீ சில நேரங்களில்!
சில நேரம் பொழுதுபோக்கு!
பொழுது போவதற்காக சில நேரம்!
இயற்கைக்கு மாறாக நீ இருக்கிறாய்!
சில நேரம் மறக்கும் வரை பயன்படுத்துவோம்!
நீ செயற்கையா! இயற்கையா! -என தெரியாமல்!
தெரியாமல் தொலைந்து போனேனா?
தெரிந்து தொலைந்து போனேனா? -என்று தெரியவில்லை
ஆனால் தொலைந்து போனேன் தொலைபேசியிடம்...
கையில் இருப்பதால் கைப்பேசி என உன் பெயர் வந்ததா?
கையிலே வைத்திருந்ததால் வந்ததா?
தெரிந்தோ தெரியாமலோ உன்னைப் பிடித்து விட்டேன்!
கைவிடப் போவதில்லை கைப்பேசியே.....

Create your website for free! This website was made with Webnode. Create your own for free today! Get started
We use cookies to enable the proper functioning and security of our website, and to offer you the best possible user experience.

Advanced settings

You can customize your cookie preferences here. Enable or disable the following categories and save your selection.