என் இனிய மாற்றமே


     'கதிர்', 'கதிர்' என்று தன்னை கூப்பிட்டவுடன் திரும்பிய அவனுக்கு அச்சரியம் காத்திருந்தது. அங்கே அவருடைய பள்ளி ஆசிரியர் செல்வம் நின்று கொண்டு இருந்தார். அவருடன் பேச வேண்டும் என்ற ஆசையில் அவரை நோக்கி செல்கிறான். அவன் செல்லும் வரையில் அவனைப் பற்றி கதிர் அழகானவன், அன்பானவன், பண்பானவன் பள்ளியில் அடிதடி செய்;யமாட்டான். கடைசி பெஞ்சில் அமர்வான் அமைதியாக தன் வேலையை பார்;பான். ஆசிரியருடன் பேச ஆரம்பித்து விட்டு தன் தொலைபேசி எண்ணை தந்தான். ஆசிரியர் அவனிடம் விடை பெற்று சென்றார்.

     பள்ளியில் ஸ்ரீதர் என்றொரு பையனும் படித்து வந்தான் அவனுக்கு, கதிருக்கும் ஆகவே ஆகாது. ஸ்ரீதர் அடி தடிக்காகவே பிறந்தவன் போல் இருப்பான். அவனுடன் யாரும் பேச மாட்டார்கள்இ அவனும் பேசாமல் தனியாகவே அமர்வான். நடு பெஞ்சில் கடைசியில் அமர்வான்.

     அவனுக்கு பக்கத்தில் தான் கதிர் எப்போதும் அமர்வான். ஸ்ரீதருக்குப் பிடிக்காமல் போக அவனை திட்டினான். ஒரு கட்டத்தில் அடிதடியாக மாறி கதிரின் கையை உடைத்தான். அவன் அடுத்து பள்ளிக்கு வரவே இல்லை.
கதிர் கல்லூரிக்கு சென்று அந்த ஊரில் உள்ள அனைவரும் பெயர் செல்லும்படி நன்நடத்தையுடன் வாழ்ந்தான். ஆனால் ஸ்ரீதரைப் பற்றிய தகவலே தெரியவில்லை. அவன் என்ன ஆனான் என்று துளியும் யாருக்கும் தெரியாது.
ஆசிரியர் செல்வம் தன் வீட்டிருக்குச் சென்றார். அவருடைய மனைவியிடம், தன்னுடைய மாணவனைச் சந்தித்துப் பேசியதையும், அவனைப் பற்றியும் கூறிவிட்டு வெளியில் சென்று விட்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு, கதவினைத் தட்டும் சத்தம் கேட்டது. அவருடைய மனைவி திறந்த போது, தபால்காரர் தபாலுடன் நின்று கொண்டு இருந்தார். அவரிடம் தபாலை வாங்கி கொண்டு உள்ளே சென்று டேபிளில் வைத்து விட்டு அவள் வேலையை பார்க்க சென்றாள்.

     சிறிது நேரத்தில் வந்த ஆசிரியர். கடிதத்தைப் பார்த்தார். அது ஒரு நிகழ்ச்சியின் நுழைவுச் சீட்டு, கவரின் வெளியே நிகழ்ச்சியின் பெயர் 'என் இனிய மாற்றமே என இருந்தது'.

        கடந்த காலத்தை அசை போட்ட படியே கதிர் வீட்டின் கதவைத் திறந்தான். கதவின் இடுக்கில் ஒரு கடிதம் வைக்கப்பட்டிருப்பதை பார்த்து விட்டு அதனை எடுத்துப் பார்த்தான். அதன் வெளியே நிகழ்ச்சி நிரல் மற்றும் அதன் பெயர். " என் இனிய மாற்றமே '' என இருந்தது. அதன் உள்ளே நிகழ்ச்சியன் டோக்கன் மற்றும் தேதி மே 7 என்று இருந்தது'.

     மே 7 என்றவுடன் கதிருக்கு ஸ்ரீதரின் நினைவு தான் வந்தது. அன்று அவனுடைய பிறந்த நாள,; மேலும் அவன் கையை ஸ்ரீதர் உடைத்த நாள். அடி மனதில் சோகம் கூடியது. அவன் போகலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருந்தான். கடைசியில் குடும்பத்துடன் போவது என்று முடிவெடுத்தான்.

       மே 7 வானம் மிக கருமையாகவும் இல்லை தெளிவாகவும் இல்லை. கதிர் மற்றும் அவன் குடும்பம் உள்ளே சென்றனர். அந்த வரவேற்பறைக்குள் ஆசிரியர் செல்வம். அவர் ஏற்கனவே வந்து விட்டார் போலும் ஆனால் அந்த இடம் இருட்டாக இருந்தது. தீடீரென்று ஒருவரின் மீது மட்டும் வெளிச்சம் அவர் ~என் இனிய மாற்றம்' என தன் வாழ்வில் தான் கஷ்டப்பட்டு முன்னேறி இன்று சென்னையில் தொழில் அதிபராக இருப்பதையும் சொன்னார். கதிர் அது யார் என்று யோசித்து கொண்டு இருந்தான். அவர் கடைசியாக தன் வாழ்வினை மாற்றியது தன் நண்பர்கள் மற்றும் ஆசிரியர் செல்வம் என்று சொல்லும் போதே அந்த அறை முழுவதும் வெளிச்சம் படர்ந்தது. அங்கு இருந்த அனைவருக்கும் ஆச்சரியம் ஏனென்றால் அனைவரும் ஒரே வகுப்பில் படித்த அவனுடைய தோழி, தோழியர் மற்றும் ஆசிரியர்.

     வேறு அனைவரும் அதிர்ச்சியுடன் அந்த மனிதனை பார்த்தனர். அது யாரும் இல்லை ஸ்ரீதர். ஆம் அன்று பண்பில்லாதவனாக பள்ளி படிப்பை முடித்து சென்னை வந்தவன் இன்று இவ்வளவு அழகாக, பண்பாக சொற்பொழிவு ஆற்றியுள்ளான்இ தொழில் அதிபராகியுள்ளான்.

                                              "மாற்றங்கள் வினா, மாற்றங்களே விடை''
                                  அவனுள் நடந்த இம்மாற்றமும் ஓர் இனிய மாற்றமே. 


Create your website for free! This website was made with Webnode. Create your own for free today! Get started