விஞ்ஞான வளர்ச்சி தந்தை


உன்னை முத்தாக கண்டெடுத்தது இஞ்ஞாலம்!
நீ முத்து முத்தாய் கண்டெடுத்தாய் விஞ்ஞானம்!
உறங்க விடாமல் இருப்பது கனவு!
நாளைய இளைஞர்களே உன் நினைவு!
எதிர்கால இந்தியா இளைஞர் கையில்!
விஞ்ஞான உலகமே உந்தன் கையில்!
விஞ்ஞான வளர்ச்சியின் தந்தையே!
இளைஞர்களின் முன்னோடியே!
நீ செலுத்திய ஏவுகணை மட்டும்
விண்ணைத் தொட வில்லை...
உன் புகழும் தான்...
உன்னுடைய தனித்துவம்!
அதுவே உன் மகத்துவம்!
பல சோதனைகள் தாண்டி...
பல சாதனைகள் செய்து...
பல பணிகள் சிறந்து...
வழங்க பெற்றாயோ!
பத்ம பூஷன் விருது...
ஆசைகளை கனவாக்கி!
கனவுகளை நினைவாக்கி!
சரித்திரம படைத்தாயோ நீ!
"எழுச்சி தீபங்களாய்" எரிந்து...
"அக்னி சிறகாய்" பறந்து...
"இந்தியா 2020" உருவாக்கி...
"அப்புறம் பிறந்தது ஒரு புதிய
குழந்தை" - அது காணுமே
நீ கண்ட கனவை!
"இந்தியா ஒரு வல்லரசு நாடு"

Create your website for free! This website was made with Webnode. Create your own for free today! Get started