தீதும் நன்றும் பிறர் தர வாரா


இருண்ட வானம், மத்தளங்கள் கொட்டிய மேகங்கள், முழங்கால் வரை ஓடிய மழைநீர்... கண்முன் உலகம் கொந்தளித்திருந்தது, இவள் மனம் போல்...

'சோதனை மேல் சோதனை
          போதுமடா சாமி...
                  வேதனை தான் வாழ்க்கை
                           என்றால் தாங்காது பூமி....'

என்று மனம் மௌனராகம் பாடியது. கண்கள் கண்ணீரை சுமக்க, மழைநீரோடு கரைந்து ஓடியது. அவள் மனம் பின்னோக்கி சென்றது. (கொசுபத்தி சுருளை சுத்தி விடுவோம் வாருங்கள்).

நான் போக மாட்டேன், போக மாட்டேன், போகவே மாட்டேன், அம்மா நான் படிக்கணும். எனக்கு படிக்க தான் பிடிச்சிருக்கு, எம்.எஸ்.சி படிக்கணும். பி.எச்டி பண்ணனும். இப்பவே வேலைக்கு போக சொல்றீங்களே, முடியாது மா... ப்ஸீஸ் மா என்று கதறிய மகளின் குரல் அங்கே சத்தமின்றி போனது.
இளங்கலை கணினி அறிவியல் முடித்த கல்லூரி வாசம் மறக்காத பட்டாம்பூச்சியாய் வலம் வந்து முதுகலை படிப்பில் சேர விடுமுறையை விழாவாய் கொண்டாடிய பிரியாவின் வாழ்வில் முதல் படியாய் வந்தது மத்திய அரசு வேலைவாய்ப்பு கடிதம்.

தந்தை குடிகாரன்இ தமையன் பொறுப்பில்லாதவனஇ; சகோதரி முதுநிலை இறுதி ஆண்டு பயில, தாயின் தன்னம்பிக்கையில் ஓடிய பிரியாவின் குடும்ப சூழ்நிலையால் கல்லூரி வாசம் தவிர்த்து, அலுவலக வாயிலில் தடம் பதிக்க வேண்டியதாயிற்று.

இப்பொழுது தெரிந்திருக்கும் பிரியா தான் நம் கதையின் நாயகி. பார்ப்பதற்கு சராசரி உயரம்;, புன்னகை முகம், வெள்ளை மனம், அம்மாவின் கண்டிப்பில் வளர்ந்த வெளி உலகம் அறியா பூமலர்.

பத்து நாள் பயிற்சி என்ற பெயரில் அலுவலகத்தில் நடக்கும் வேலைகளை வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டு, அன்றைய நாள் அந்த அலுவலகத்தின் முழு பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டது. அவளுடைய பணி கிராமப்புற தபால் அலுவலர். அங்கு இவள் மட்டுமே சிறியவர். அவளுக்கு கீழ் பணிபுரிய இருவர். ஒருவர் தந்தையை விட வயதில் பெரியவர்-நாகராஜ், மற்றவர் போஸ்ட்மேன் ஐந்தாறு வருடங்களில் ஓய்வு பெற இருப்பவர்-முத்துமாணிக்கம்.

இங்கு தபால் நிலைய பணிகளைப் பற்றி கூறியே ஆக வேண்டும். வரும் தபால்களுக்கு முத்திரை குத்துவது மட்டும் பிரியாவின் பணி அன்று சேமிப்புக் கணக்கில் பணம் எடுத்தல், கொடுத்தல் என்று வங்கியில் செய்யப்படும் அனைத்து வேலைகளும் தபால் நிலையத்தில் செய்யப்படும். இவை அனைத்தும் பார்த்துக் கொள்வது பிரியாவின் வேலை.

பிரியா தினமும் இரு பேருந்துகள் மாறி, சில கிலோமீட்டர் நடந்N;த அவள் அலுவலகம் அடைய வேண்டும். ஆண் பழக்கமே அறியாத பிரியா, முதன் முதலில் தனியாக வேலை செய்ய துவங்கினாள்.

போஸ்ட்;மேன் தாத்தா சிறு பிள்ளை என்று அரட்டி உருட்டி, பாசம் காட்டுவது போல் பாசாங்கு செய்ய, தினம் அக்கவுண்டை துணை அலுவலகம் சமர்ப்பிக்கும் நாகராஜ் 'தனது மகளுக்கு கிடைக்க வேண்டிய வேலை பிரியாவுக்கு கிடைத்து விட்டது' என்ற ஆதங்கத்துடன் நல்லவர் போல் வேடமிட்டார். பாவம் இதை எதுவும் அறியாத பிரியா எந்த வேலை செய்தாலும் இருவரையும் கேட்டு நடந்து கொள்வாள்.

எப்படியோ வேலையை சிறுசிறு தவறுகளுடன் பழகிக் கொண்டாள் பிரியா.தினமும் பணம் எடுக்க, வாங்க என்று ஊரில் நிறைய பேர் வருவார்கள். தினம் அலுவலகம் நடந்து வரும் போது மிக கடினமாக உணர்வாள். அப்பொழுது ஒருவன் ~~மேடம் வாங்க நான் உங்க, ஆபிஸ் தான் வரேன் பணம் போடனும் உங்கள டிராப் பண்றேன்'' என்று அழைத்தான். முதலில் மறுத்த பிரியா, அவன் வற்புறுத்தவும் சரி என்று அமர்ந்தாள். நன்றி என்று இறங்கி விட்டாள்.. அவனும் சென்று விட்டான்.
அவன் பெயர் சிவா. இதே போல் அவன் அடிக்கடி அலுவலகம் செல்வதும், சில சமயம் அவனது மோட்டார் சைக்கிளில் இறக்கி விடுவதுமான ஆரம்பித்தது. காதல் என்ற வார்த்தை கூட அறியாத பிரியா, பேருந்து வராமல் கடுப்பானாள். அதே சமயம், இதற்கெனவே காத்திருந்தது போல், அச்சமயம் வந்த சிவா, வாங்க நான் உங்கள பஸ் ஏத்தி விடுறேன். என்று அழைத்தான்.

'நன்றி அண்ணா' என்று அவனுடன் ஏறிக்கொண்ட பிரியா வண்டி பாதை மாறி செல்லவும் பயந்தாள். 'இது குறுக்கு வழி பயப்படாத' என்று தைரியம் ஊட்டினான் எனினும் பயத்துடன் இருந்த பிரியாவை யாருமில்லா பாதையில் நிறுத்தி எனக்கு உன்ன பிடிச்சிருக்கு நான் உன்ன காதலிக்கிறேன் என்று அணைக்க முயல, பிரியா பயந்தாள்.

~~அண்ணா, ஏன் இப்படிலாம் பேசுறீங்க'' நான் போறேன் என்று விரைந்தாள். உடனே சிவா 'என்னடி ரொம்ப பண்ற, ஒழுங்கா நான் சொல்றத கேளு' என்று மிரட்டினான். இவள் பயந்து ஓட அவன் நகம் பட்டு சால்வை கிழிய, பயந்து ஓடியவள் தடுமாறினாள். சிவா வெறியுடன் அவளை நெருங்க, அச்சமயம் பிரியாவின் ஒன்று விட்ட சகோதரன் அவனை தடுத்தான் (என்னடா இங்க ஓடுது..). 'பாண்டி வழிவிடு' என்று அவன் மிரட்ட, சிவா ஒழுங்கா போயிடு இல்ல உங்க அம்;மா கிட்ட சொல்ல வேண்டி இருக்கும்' என்று பாண்டி மிரட்ட ''அம்மா'' எனவும் பயந்தான். இன்னைக்கு தப்பிச்சிட்ட, எப்;படினாலும் என் கிட்ட சிக்காமலா போய்டுவ என்று மிரட்டி விட்டு சென்றான் சிவா. பின்பு அழுத பிரியாவை பேருந்து ஏற்றி வீட்டிற்கு அனுப்புவதற்குள் பாண்டிக்கு போதும் போதும் என்றாகி விட்டது.

இந்நிகழ்வை முதன்முதல pல் சந்தித்த பிரியா தினம் தினம் பயத்துடன் வாழ்ந்தாள். பாண்டி அவள் வேலை பார்க்கும் ஊரில் வாழ்பவன். பிரியாவின் நல்ல குணம் அவளை பாண்டியின் தங்கையாக நினைக்க வைத்தது. மனக்குழப்பத்தால் வேலையில் கவனம் சிதறிட, பெரும் தொகையை நாகராஜ் அவர்கள் மறைத்திட, உயர் அதிகாரி முன் தன் பணியை காத்துக் கொள்வதா அல்லது அவரை காட்டிக் கொடுப்பதா என்று, தெரியாமல் குழப்பம், அவரே நாகராஜ் முன் வந்து, பிரியா சின்னப் பொண்ணு அவ தான் தெரியாம இப்படி பண்ணிட்டா என்று நல்லவிதமாக எடுத்து (போட்டு) கொடுக்க. இரவு எட்;டு மணி தாண்டி அலுவலக வாயிலில் தவம் கிடந்து செய்யாத தவறை ஒத்துக் கொள்ளச் சொல்லி வற்புறுத்திய உயர் அதிகாரியை ஏதும் சொல்ல இயலாமல், வற்புறுத்தல் ஒன்றை மட்டும் வைத்து, நாலைந்து பேர் சேர்ந்து மிரட்ட, செய்யாத தவiற ஒத்துக் கொண்டு, உலகம் என்றால் என்ன? என்று உணர்ந்து கொண்டால்.

அவளது நல்ல அன்பான பண்பான குணம் பாண்டி போன்ற நல்ல சகோதரனையும், வெகுளியான குணம், சிவா, நாகராஜ், உயர் அதிகாரி போன்ற தீயவர்களையும் அதன் பலன்களையும் அனுபவித்தாள்.
பின்பு மீண்டும் தன் படிப்பை கையில் எடுத்து, எவ்வித சதிக்கும் இடமளிக்காமல் தன்னம்பிக்கையோடு போராடி, எந்த அலுவலகத்தில் செய்யாத தவறு;ககாக தண்டனை பெற்றாளோ, அதே போல் பலமடங்கு அலுவலகங்களை அதிகாரம் செய்யும் அதிகாரியாக மாறிய பின்னர் அவர்களை சந்தித்தாள்.

தலை குனிந்து அவள் சென்ற அதே பாதையில், சைலன்சர் ஒலிக்கும் அலுவலக ஊர்தியில் தலைநிமிர்ந்து சென்றாள்.

Create your website for free! This website was made with Webnode. Create your own for free today! Get started