பழமையில் புதுமை

எரிவாயுவின் ஆட்சியில்

விடுதலையானது

காட்டு மரங்கள்...........


விண்மீன் பூச்சியின்

ஒளியில் உருவானது

மின் விளக்குகள்..........


உணவின் கட்டுப்பாடு மாறி

மனக்கட்டுப்பாடு உருவாகின


உணவே மருந்தாக உள்ள

பழமையான உலகில்

மருந்தே உணவாக

மாறிவிட்டன........


மாறும் இவ்வுலகில்

வாழ்வது அறிதல்ல.....


சுறுசுறுப்பாக ஓடும் கால்கள்

இப்போது கணினி

மற்றும் பல்பொருளின்

நடுவில் அடிமையாகியது.....


GOOD MORNING என்ற சொல்

GM என மாறியுள்ளது.....


சொற்களும் சுருங்கின

நம் வாழ்க்கையும் சுருங்கின


வாழ்கின்ற வாழ்க்கை

புதுமையின் அடியில் மடிந்தன

வாழ்க்கை மாறியது..............

Create your website for free! This website was made with Webnode. Create your own for free today! Get started