வாழ்க்கை


        அது ஒரு மழைநேரம். அங்கே தூரத்தில் இருந்த குடிசை வீட்டில் 'அம்மா...!' என்ற குரல் அங்கிருந்த அனைவரின் வீட்டிலும் கேட்டது. என்னுடைய வீட்டிலும்; கூட. ஆனால் எவரும் அவர்களுடைய வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அந்த வீட்டில் இருந்து கூக்குரல் கேட்டுக் கொண்டே இருந்தது. என்னால் எழமுடியவில்லை. நானும் அந்த குரலுக்காக அழுதேன் என்னைத் தூக்கி சமாதானப்படுத்த பாட்டுகள் பல பாடினர். ஆனால் அந்த குரல் எதற்காக அப்படி கதறியது என்று எனக்குத் தெரியவில்லை. அந்த குரலை நோக்கிக செல்ல வேண்டும் என்ற ஆசையில் என்னை தூக்கியவரிடம் இருந்து விடுபட நினத்து திமிறினேன் ஆனால் என் முயற்சி வீணானது.

     சிறிது நேரத்தில் அந்தக் குரலுக்கான விடையை யாரோ சொல்ல, என் காதில் நான் கேட்டேன். "அவளுக்கு ஆண் பிள்ளை" பிறந்துள்ளது. எனக்கு அப்போது எதுவும் விளங்க வில்லை. நாங்கள் ஓட பேச என அனைத்தையும் செய்ய ஆரம்பித்தேன். அப்போது என்னைப் போன்று விளையாடிய குழந்தை ஒன்றைப் பார்த்து சிரித்தபடியே நானும் விளையாடச் சென்றேன். திடீரென்று என்னுடைய மிகவும் பிடித்தபடி அழுத்தி இருந்த ஒருவர் என்னை இழுத்து சென்றனர். இந்த ஸ்பரிசம் என்னால் எளிதாக உணர முடிந்தது. என் தலையை தூக்கி பார்த்தேன். அவள் என் தாய் என்னை ஏதோ திட்டியபடியே என்னை தூக்கி சொன்னார். "ஆண் பிள்ளை கூட விளையாட கூடாது" நான் கேட்ட கேள்வி ஆண் பிள்ளைனா யாருமா? அதற்கு என் அம்மா குடுத்த விளக்கம் கன்னத்தில் கிள்ளும் கையில் அடிதான்.
அதற்கு அடுத்த எது செய்தாலும் அப்படி கூடாது, இப்படி கூடாதனு சொல்லி கொண்டே இருக்கும் போது எனக்குள் கேள்விகள் பல வந்தன. இவர்கள் யார் என் செயலை, செய்கையை குறை சொல்ல? ஆனால் அமைதியாக நிற்பதை தவிர வேறு வழியில்லாம் இருந்தேன். இன்னும் வயது ஏற ஏற, எனக்குள் ஒருவித பயம். என் சுயத்தை இழந்து விடுவேனோ என்று.

     என் அம்மா இப்போது உனக்கு வயது 15 என்றார். அப்படியே என்னால் நம்ப முடியவில்லை இன்னும் நான் என்னை சிறு குழந்தையாக நினைத்துக் கொண்டு இருக்கிறேன். இத்தனை ஆண்டுகளாய் என் சுயத்தை நான் இழந்து விட்டேன் என்று எனக்கு தோன்றியது. என் பெயர், அடையாளம், உணவு, உடை இருப்பிடம், தலைமுடி முதல் கால் நகம் அடுத்தவர்காக மட்டுமே வாழ்ந்த இந்த வாழ்க்கையை விட்டு வெளியேற நினைக்குற நேரத்தில்... அடுத்த முடிவை எடுத்தனர். உறவினர்களும், என் பெற்றோரும். அது தான் திருமணம்.
என்னிடம் கேட்காமல், சொல்லாமல் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தன. திருமணத்திற்கு முந்திய நாள் நான் வீட்டை விட்டு வெளியேறி, ஊரை விட்டு சென்றேன். எனக்கு தெரியும் அடுத்த நாள் என்னுடைய பெயர் "ஓடுகாலி" என்று மாறியிருக்கும்.
மாறட்டும்! என்னிடம் இவர்கள் மாற்றி விஷயங்கள் ஏராளம். இதுவும் மாறட்டும்! என் பெயர் முன்னை விட பிரபலமாகலாம்.. என்று அன்றைக்கு நான் நினைத்தது இன்று சாத்தியமானது.

        ஆம்! இன்று நான் மிகப் பெரிய எழுத்தாளர். ஊரில் இருந்து வந்த நான் ஒருவரிடம் என் கதை சொல்லி, எழுதி காமிக்க, அவர் அதை ஒரு புத்தகமாக அச்சிட கொடுத்தார். அன்றிலிருந்து இன்று வரை மக்களிடம் எனக்கென்று ஒரு பெயர் வந்தது. அதுதான் "ஹீரா". அவர்களுக்குள்ளும் என்னைப் பற்றிய ஒரு மனத்திரை இருக்கும். அதில் சில நான் நானாக இருக்கலாம். அல்லது அவர்களுக்கு ஏற்றவள் போல நான் இருக்கலாம்.
வாழ்க்கை சில பேரை மேலே தூக்கும் சிலரை தள்ளும் ஆனால் என்றும் தவறான வழியை காட்டியதும் இல்லை அதுபோல அடுத்தவரை தன்னைப் போல மாற்றவோ முயற்சி செய்யாது. அப்படி முயற்சித்தால் அது வாழ்க்கை அல்ல நரகம். அடுத்தவர்களை தன்னை போல் மாற்ற நினைக்காத சமூகமே, அது தாயாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி நல்ல வாழ்க்கையைத் தரும்;

Create your website for free! This website was made with Webnode. Create your own for free today! Get started